உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட கராத்தே போட்டி : 300 மாணவர்கள் பங்கேற்பு

மாவட்ட கராத்தே போட்டி : 300 மாணவர்கள் பங்கேற்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எஸ்.டி.சீயோன் பள்ளியில் ஓகினோவா கோஜி ரியொ கராத்தே பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடத்தப்பட்டது.பள்ளி இயக்குனர் சாமுவேல் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் எட்வர்ட் முன்னிலை வகித்தார். கராத்தே பள்ளி நிறுவனர் ரெங்கநாதன் வரவேற்றார். வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், அரிமா சங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், லோகநாதன், சி.முட்லுார் வள்ளலார் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகப்பிரியா சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசு சான்றுகள் வழங்கினர்.போட்டியில் கட்டா, ஷாய் பிரிவுகளில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, வடலுார், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, கடலுார் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். கராத்தே வீரர்களுக்கு பெல்ட் மற்றும் கேடயம், சான்றுகள் வழங்கப்பட்டது.பயிற்சியாளர் இளவரசன், பிரத்தியூனன், சத்யமூர்த்தி, ரவிக்குமார் பள்ளி பொறுப்பாசிரியர்கள் சுகன்யா, சத்யா, தவமணி, அபிநயா, பரங்கிப்பேட்டை பாபா பள்ளி பொறுப்பாசிரியர் மகேஸ்வரி, அலமேலு மற்றும் கராத்தே நடுவர்கள் ராஜ்கிரண், எழில்பாத்திமா, அட்சயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இளவரசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை