உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் டிட்டோ ஜாக் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

கடலுாரில் டிட்டோ ஜாக் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

கடலுார் : தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலுாரில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.பழைய கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்த போராட்டத்திற்கு, சங்க பொதுச் செயலாளர் அந்தோணி ஜோசப் தலைமை தாங்கினார். சங்க மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ஜெகநாதன் பேசினார்.தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர். மாநில பொதுச் செயலாளர் தாஸ் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.போராட்டத்தில், 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர்களின் 30 அம்ச கோரிக்கைகளை உடன் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.பல்வேறு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிற்றரசன் முருகன், மணிவண்ணன், பாஸ்கர், வேதரத்தினம், ராஜேந்திரன், தீனதயாளன், ஜான் போஸ்கோ, குமரன், குமரகுருநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ