பூதங்குடி பள்ளியில் தீபாவளி விழா
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் தீபாவளி விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபா சுஜின் தலைமை தாங்கினர். சேத்தியாத்தோப்பு இந்தியன்வங்கி மேலாளர் பிரதீப், பு.ஆதனுார் முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினர். பள்ளியில் மாணர்கள், ஆசிரியர்களுக்கு பட்டாசு, பரிசு பொருட்கள் வழங்கினர். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனிராஜ் நன்றி கூறினார்.