உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., தலைவர் மறைவு: கலைமகள் பள்ளியில் அஞ்சலி

தே.மு.தி.க., தலைவர் மறைவு: கலைமகள் பள்ளியில் அஞ்சலி

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு, அடரி கலைமகள் மெட்ரிக் பள்ளி சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு, மங்களூர் தே.மு.தி.க., மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கி, விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மங்களூர் ஒன்றிய அவைத் தலைவர் திருமால், அடரி கலைமகள் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரேமா, தலைமை ஆசிரியர் பிரேமலதா, அலுவலர்கள் ராதா, கருப்பையா, அனுஷியா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ