உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் பாதுகாப்புடன் அண்ணாதுரை பிறந்த நாள் ஸ்ரீமுஷ்ணத்தில் தி.மு.க.,-அ.தி.மு.க., மரியாதை

போலீஸ் பாதுகாப்புடன் அண்ணாதுரை பிறந்த நாள் ஸ்ரீமுஷ்ணத்தில் தி.மு.க.,-அ.தி.மு.க., மரியாதை

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தி.மு.க.,- அ.தி.மு.க., வினர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். ஸ்ரீமுஷ்ணத்தில் அண்ணாதுரை சிலைக்கு நீண்ட காலத்திற்கு பின்னர் அ.தி.மு.க., வினர் வர்ணம் பூசி புதுப்பித்து சிலையின் பீடத்தில் இரட்டை இலை சின்னம் வரைந்தனர். இதற்கு கடந்த 13ம் தேதி, தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாதுரை சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் சிலை பழைய நிலையிலேயே இருக்க வேண்டுமென, வருவாய்த் துறை சார்பில் அ.தி.மு.க., வினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை அ.தி.மு.க., வினர் ஏற்க மறுத்ததால் சிலையின் பீடத்தில் இருந்த இரட்டை இலை சின்னத்தை இரவோடு இரவாக வருவாயத்துறையினர் அழித்தனர். இதனால், தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. நேற்று அண்ணாதுரை பிறந்த நாள் விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது சிலைக்கு சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அ.தி.மு.க., சார்பில் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன், ஜோதி பிரகாஷ், நகர செயலாளர் பூமாலை கேசவன் உள்ளிட்டோர் கடை வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். ஒன்றிய தி.மு.க., செயலாளர் தங்க ஆனந்தன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துராமலிங்கம், நகர செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் ஊர்வலமாக வந்து அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி