மேலும் செய்திகள்
நெய்வேலி தொகுதியில் தி.மு.க., பரப்புரை
27-Dec-2025
நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் நடந்த தி.மு.க., பரப்புரை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி தெற்கு ஒன்றியம், வேகாக்கொல்லை ஊராட்சியில் உள்ள பாகங்கள் எண் 90, 91, 92 ஆகியவற்றில் 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' பரப்புரை கூட்டம் நடந்தது. இதில் தலைமை தாங்கி, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'பாகங்கள் வாரியாக, பாக நிலை முகவர்கள் மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜென்டுகள் கவனமாக செயல்பட வேண்டும். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறிப்பாக, பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டகள் குறித்து மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும்,' என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் சண்முகம், பன்னீர்செல்வம், சக்கரவர்த்தி, வேல்முருகன், பழனி, பாக நிலை முகவர்கள் அன்பழகன், சிவஞானம், அன்பரசன், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் நிர்வாகிகள் கார்மேகன், அன்புமணி, ஆனந்தவேல், கபிலன், பாலா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
27-Dec-2025