உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு

தி.மு.க., ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு

சிறுபாக்கம் : கடலுார் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டசபை தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. இதுகுறித்து மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் விடுத்துள்ள அறிக்கை: கடலுார் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று (14ம் தேதி) நடக்கிறது.காலை 10 மணிக்கு மங்களூர் ஜி.வி.,மகாலில் திட்டக்குடி சட்டசபை தொகுதிக்கும், 11:30 மணிக்கு விருத்தாசலம் சிவபூஜா திருமண மண்டபத்தில் விருத்தாசலம் தொகுதிக்கும், மாலை 3:00 மணிக்கு பண்ருட்டி வி.வி.எம்.மகாலில் பண்ருட்டி தொகுதிக்கும், மாலை 5:00 மணிக்கு நெய்வேலி தொ.மு.ச.,அலுவலகத்தில் நெய்வேலி தொகுதிக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !