| ADDED : ஜன 31, 2024 12:57 AM
கடலுார்:கடலுாரில் தி.மு.க., கவுன்சிலர்கள் முடிவு செய்திருந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கடலுார் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜிடம், தி.மு.க., கவுன்சிலர்கள் கீதா, பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், சுமதி, மகேஸ்வரி, ராதிகா, கர்ணன், பாரூக் அலி, கீர்த்தனா ஆகியோர் கொடுத்துள்ள மனு;மாநகராட்சி தேர்தலில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக, எங்களது வார்டுகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தர மறுப்பதோடு, எங்களை அவமானப்படுத்துகின்றனர்.எங்கள் நிலையை தி.மு.க., தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக இன்று காலை 8:00 மணிக்கு மாநகராட்சி அலுவலக காந்தி சிலை முன், அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு, அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெற்றதாக, மனு கொடுத்த கவுன்சிலர்கள் கூறினர்.