தி.மு.க., பொறியாளர் அணியில் பொறுப்புகள்: பன்னீர்செல்வம்
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி பதவிகளுக்கு விண் ணப்பிக்கலாம் என, அமைச்சர் பன்னீர்செல்வம் அணிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட செயலாளரும் அமைச்சரு மான அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணிக்கு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் பகுதி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் பொறியியல் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு நிறைவு செய்தவராக இருக்க வேண்டும். அந்தந்த பகுதியின் வாக்காளராக இருத்தல் அவசியம். ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் எனும் அளவுக்கு மிகாமல் பொறுப்புகள் நியமிக்கப்படுகின்றனர். பெண் பொறியியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டுள்ள 'கியூ ஆர் கோடு' பொறியாளர் அணியின் போர்ட்டல் வழியே மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தார்களை நேரில் அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.