உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாய்க்காலில் குளித்த தி.மு.க., நிர்வாகி நீரில் மூழ்கி பலி

வாய்க்காலில் குளித்த தி.மு.க., நிர்வாகி நீரில் மூழ்கி பலி

சிதம்பரம்: சிதம்பரத்தில் நண்பருடன் வாய்க்காலில் குளித்த தி.மு.க., பிரமுகர் நீரில் மூழ்கி இறந்தார். கடலுார் மாவட்டம், சிதம்பரம் எம்.கே. தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் மகன் திராவிடதாசன்,31; பட்டதாரியான இவர் தி.மு.க., குமராட்சி ஒன்றிய, பொறியாளர் துணை அமைப்பாளராக பதவி வகித்தார். சிதம்பரம் அடுத்துள்ள சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள வடக்கு ராஜன் வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நண்பருடன் குளிக்க சென்றார். அப்போது வாய்க்காலில் நீர் வரத்து அதிகமாக இருந்துள்ளது. நண்பர் வருவதற்கு முன்பே திராவிடதாசன் வாய்க்காலில் இறங்கிய போது நீரோட்டத்தின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் இரவு 9.00 மணி வரை தேடியும் கிடைக்காததால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி துவங்கியது. பிற்பகலில் திராவிடதாசன் உடலை மீட்டனர். சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை