மேலும் செய்திகள்
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
28-Nov-2025
நெ ல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன். தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். தி.மு.க., நகர செயலாளராக மணிவண்ணன் உள்ளார். இவர்கள் இருவரும் தொடர்ந்து 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட கணேசன் சமாதானம் செய்தும், 'கோஷ்டி' பூசல் தொடர்கிறது. இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ஆதரவாளரான இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா தலைமையில் ஆதரவு வார்டு நிர்வாகிகள், கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர் கணேசனை சந்தித்து புகார் அளித்தனர். அதில் நகர செயலாளர் மணிவண்ணன், கட்சி நிகழ்ச்சிகளுக்கு நகர, வார்டு நிர்வாகிகளை முறையாக அழைப்பதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார். ஊரில் இல்லாதவர்களுக்கு பதவி வழங்குகிறார். மணிவண்ணன் சார்ந்த சமூகத்தினர் அதிகம் வசிக்கும் வார்டுகளில் கூட தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய முடியவில்லை. இவரது செயல்பாட்டால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் நமக்கு பின்னடைவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் நகர செயலாளர் மணிவண்ணனை நீக்கி விட்டு அனைவரையும் அரவணைத்து செல்பவரை புதியதாக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதேபோல் நகர செயலாளர் மணிவண்ணனும், மாவட்ட செயலாளர் கணேசனிடம் புகார் அளித்துள்ளார். அதில், நான் கட்சிக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறேன். இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் படத்தை போடாமல் போஸ்டர் ஒட்டுகிறார். இளைஞரணி நிர்வாகிகளுடன் சேர்ந்து பணியாற்றுவதில்லை. கட்சியில் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். தேர்தல் வரும் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க.,வுக்குள் நடக்கும் கோஷ்டி பூசல், அக்கட்சியினரிடையே கடும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
28-Nov-2025