உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., ஆட்சியில் சுதந்திரமாக சுற்றி வரும் கூலிப்படை: எச்.ராஜா குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சியில் சுதந்திரமாக சுற்றி வரும் கூலிப்படை: எச்.ராஜா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுவதும் கூலிப்படையினர் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரினம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து அதிக பேர் உயிரிழக்கும் மாநிலமாக மாறி உள்ளது. சட்ட விரோத கூடாரமாக திமுக உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக அதிகரித்து உள்ளது.

மாற்று கட்சி பா.ஜ.,

தமிழகம் முழுவதும் கூலிப்படையினர் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இதனை பார்க்கும் போது முதல்வர் ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவரது கட்டுப்பாட்டில் அரசு மற்றும் கட்சி இல்லை. தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விற்கு மாற்று கட்சியாக பா.ஜ., உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு லோக்சபா தேர்தலில் வாங்கி உள்ள ஓட்டு சதவீதம் தான்.

பாடம் புகட்டுவார்கள்

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் கூட்டணி கட்சியுடன் இணைந்து போட்டியிடுவோம். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள். ஏனென்றால் அருகாமையில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர். இந்த அரசை மக்கள் தண்டிப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்புசாமி
ஜூலை 07, 2024 16:35

கூலிப்படைகளை சுதந்திரமா சுற்றவிடும்.போலீஸ் தத்திகளை விமர்சியுங்களேன் பார்க்கலாம்.


Barakat Ali
ஜூலை 07, 2024 14:33

ஆம்ஸ்ட்ராங் தலித் சமுதாயத்தின் ஒரு முக்கியத்தலைவர் .... ஆம்ஸ்ட்ராங் கிற்கு மெரினா பீச்சில் இடம் கேட்கவேண்டும் .......


ramkumar
ஜூலை 07, 2024 22:44

beech என்ன கல்லறையா ?


Svs Yaadum oore
ஜூலை 07, 2024 14:04

.திராவிட வரிப்பணம் எல்லாம் உத்தரப்பிரதேசத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தானுங்களாம் .... இப்போது விடியல் அரசு சட்டம் ஒழுங்கை தமிழ் நாட்டில் சரி செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேசம் முன்னாள் முதல்வர் .....


Murugesan
ஜூலை 07, 2024 15:33

திராவிட முன்னேற்ற கழக குடிகார உபி ,தமிழக ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்த வாழுகின்ற கொள்ளைக்காரார்கள் அவர்களை கேளு


Barakat Ali
ஜூலை 07, 2024 17:09

இடவொதுக்கீடு எப்படி நியாயமோ அப்படித்தான் மாநிலங்களுக்கிடையேயான வரிப்பணப் பங்கீடும் ..


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ