உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கடலுார்: துாக்கணாம்பாக்கத்தில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கத்தில் தி.மு.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். நுாறு நாள் வேலை திட்ட நிதி உட்பட பல்வேறு திட்ட நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கவர்னரை மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், நிலவள வங்கி முன்னாள் தலைவர் ராமலிங்கம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஞானப்பிரகாசம், ஞானம், ஜெயமூர்த்தி, முத்துக்குமாரசாமி, தமிழரசி பிரகாஷ், மனோகர், காசிநாதன், கந்தன், சரவணன், சுதாகர், நிர்வாகிகள் அழகானந்தம், சிந்துநாதன், முத்துவேல், பரத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை