உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., நலத்திட்ட உதவிகள் அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்

தி.மு.க., நலத்திட்ட உதவிகள் அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்

கடலுார்: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடலுார் செல்லங்குப்பத்தில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 500 பயனாளிகளுக்கு சேலை, மிக்சி, கிரைண்டர், கண் கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன், அரிமா மாவட்ட தலைவர் தினகரன், தி.மு.க., முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், கவுன்சிலர்கள் சரத் தினகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.விழாவில், கவுன்சிலர் சரத் தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.அப்போது, வேலன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் வேல்முருகன் கவுன்சிலர்கள் தமிழரசன், கீதா குணசேகரன், கர்ணன், பாருக் அலி, சுமதி ரங்கநாதன், கீர்த்தனா ஆறுமுகம், மகேஸ்வரி விஜயகுமார், ராதிகா பிரேம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ஊராட்சி தலைவர்கள் முத்துக்குமாரசாமி, மனோகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சுதாகர், ராதாகிருஷ்ணன், துறைமுகம் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ரோட்டரி ராசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ