உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., செயற்குழு கூட்டம் தேர்தல் குறித்து ஆலோசனை

தி.மு.க., செயற்குழு கூட்டம் தேர்தல் குறித்து ஆலோசனை

கடலுார் : கடலுார் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது.அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான பன்னீர்செல்வம், கடலுார் சட்டசபை தொகுதி பார்வையாளர் அங்கையர்கன்னி தலைமை தாங்கி பேசினர். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாநகர செயலாளர் ராஜா, மேயர் சுந்தரி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற தீவிர தேர்தல் பணியாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் விஜயசுந்தரம், தனஞ்செயன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், கவுன்சிலர்கள் சாய்துன்னிசா சலீம், ஹேமலதா சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை