உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு உள்நாட்டு கூட்டின மீன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்து, நபார்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முழு மாதிரி செயல் விளக்கத்திடல் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன் வளர்த்தல் செயல்முறைகள் குறித்து பேசினார். வருமானம் பெருக மீன் வளர்ப்பில் ஈடுபடும் வழிமுறைக ள் குறித்து பேராசிரியர் கண்ணன் பேசினார். பரங்கிப்பேட்டை மீன் வளர்ப்புத்துறை ஆய்வாளர் கார்த்திக், ஒருங்கிணைந்த பண்ணையில் விரால் மீன் குஞ்சு வளர்க்கும் முறை, கிப்ட் திலப்பியா மீன்குஞ்சு வளர்ப்பு, கூட்டின மீன் வளர்ப்பு முறை மற்றும் தீவன மேலாண்மை பற்றி பேசினார். பேராசிரியர் கலைச்செல்வி, மண்டல ஆராய்ச்சி நிலைய ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரி மீன் குட்டையில் மீன் வளர்த்தல், நீர் நிலையில் வளரும் மர ங்கள், நெல் பயிர் செய்தல், இயற்கை எறு தயாரித்தல், அசோலா, தேனி வளர்ப்பு, முயல், வாத்து, ஆடு வளர்ப்பு குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தார். முன்னதாக, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம், கிசான் கடன் அட்டை திட்டம், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை, மாவட்டத்தில் மீன் விரலிகள் மற்றும் மீன் குஞ்சுகள் வளர்ப்பு குறித்த கையேடுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ