உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இறந்த முதியவரின் கண்கள் தானம்

இறந்த முதியவரின் கண்கள் தானம்

நெல்லிக்குப்பம்: இறந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவபூஷனம்,60; விவசாயி. இவர் உடல்நலக் குறைவால் இறந்தார்.இவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது மனைவி அமுதா,மகன் ஜெயபிரகாஷ், மகள்கள் மாலா, ஜமுனா, நந்தினி ஆகியோர் நெல்லிக்குப்பம் அரிமா சங்க பொருளாளர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் இறந்த சிவபூஷனத்தின் கண்களை தானமாக பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ