உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடிகால் வாய்க்கால் துார்வார கோரிக்கை

வடிகால் வாய்க்கால் துார்வார கோரிக்கை

புவனகிரி: கீரப்பாளையம் அருகே வடக்கு பூதங்குடி வாய்க்கால் துார்வாராததால் விவசாயிகள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி ஆண்டுதோறும் கீரப்பாளையம் பகுதியில் உள்ள கிளை வாய்க்கால் வழியாக விவசாயிகள் சம்பா நடவு பணி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வயலுாரில் வடக்கு பூதங்குடி வாய்க்கால், பாசன வாய்க்காலாகவும், மழைக் காலங்களில் வடிகால் வாய்காலாகவும் உள்ளது. வடக்கு பூதங்குடி வாய்க்காலை துார்வாராததால் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில் வடிகால் வாய்க்காலை துார்வார வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை