உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சொரத்துார் ஊராட்சியில் வடிகால் பணி  துவக்கி வைப்பு

சொரத்துார் ஊராட்சியில் வடிகால் பணி  துவக்கி வைப்பு

பண்ருட்டி,; பண்ருட்டி அடுத்த சொரத்துார் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.பண்ருட்டி ஒன்றியம் சொரத்தூர் ஊராட்சி, புது நகரில் மழைகாலங்களில் அடிக்கடி மழைநீர் தேங்கி நின்று, பொது மக்கள் அவதியடைந்தனர். இதனையடுத்து ரூ.9 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்க திட்டமிட்டு, ஒப்பந்த பணி நேற்று துவங்கியது. ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி தலைவர் கவிதா ஜனார்த்தனன் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ஆறுமுகம் மற்றும் செல்வராசு, சின்னத்துரை, குமரவேல், குமார், சக்திவேல் சிலம்பரசன் சேகர் பழனிவேல் ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி