உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயிற்று வலியால் டிரைவர் தற்கொலை

வயிற்று வலியால் டிரைவர் தற்கொலை

திட்டக்குடி: திட்டக்குடி அருகே வயிற்று வலி காரணமாக, டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திட்டக்குடி அடுத்த கொடிகளம், செக்கடி தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன், 45; டிரைவர். இவருக்கு வயிற்று வலி பிரச்னை இருந்தது. நேற்று காலை 6:30 மணியளவில் மீண்டும் வலி அதிகமானதால், கொட்டாரம் அருகே உள்ள ரைஸ் மில் சாக்கு கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆவினங்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை