உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புவனகிரியில் டி.எஸ்.பி., ஆய்வு   

 புவனகிரியில் டி.எஸ்.பி., ஆய்வு   

புவனகிரி: புவனகிரி போலீஸ் நிலையத்தில் டி.எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார். சிதம்பரம் உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில், புவனகிரியில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். புவனகிரி இன்ஸ் பெக்டர் முத்து ஈஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் லெனின் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை