உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரருக்கு துவாதசி அலங்காரம்

ராகவேந்திரருக்கு துவாதசி அலங்காரம்

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நேற்று துவாதசி அலங்காரம் நடந்தது. புவனகிரியில் மகான் ராகவேந்திர சுவாமி அவதார இல்லம் கோவிலாக நிர்மானிக்கப்பட்டு பல்வேறு வழிபாடுகள் நடந்து வருகிறது. நேற்று துவாதசியை முன்னிட்டு மந்ராலய மரபின்படி, சுவேத நதி தீர்த்தத்துடன் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திரர் அருள் பாலித்தார். பூஜைகளை ரமேஷ் ஆச்சாரிய குழுவினர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி