உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஈ.ஐ.டி., பாரி ஆலை விவசாயிகளுக்கு மானியங்கள் அறிவிப்பு

ஈ.ஐ.டி., பாரி ஆலை விவசாயிகளுக்கு மானியங்கள் அறிவிப்பு

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு தொடர்ந்து பல்வேறு மானியங்களை அறிவித்து வருகிறது. தற்போது புதியதாக மானியங்களை அறிவித்துள்ளது.இதுபற்றி ஆலை நிர்வாகம் கூறியதாவது:2024-25ம் ஆண்டுக்கு கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக டன்னுக்கு 3151 ரூபாய் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடந்த பருவத்தை விட 231 ரூபாய் கூடுதலாகும். கடந்த பருவத்தில் தமிழக அரசு சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 வழங்கியது. வரும் பருவத்திலும் வழங்கினால் விவசாயிகளுக்கு கூடுதலாக தொகை கிடைக்கும்.2024 நவம்பர் முதல் 2025 ஜூன் வரை கரும்பு மற்றும் நர்சரி நடவுக்கு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.12,700 ஊக்கத்தொகை கிடைக்கும். கோ 86032, பி.ஐ.1110, பி.ஐ.0655 ரக கரும்பு நடவுக்கு ஏக்கருக்கு 7500, பி.ஐ.0016 மற்றும் 0663 ரகங்களுக்கு 5 ஆயிரம் மான்யம் வழங்கபடும்.மறுதாம்பு கரும்புக்கு டன் ஒன்றுக்கு கூடுதலாக 200 வழங்கபடும். தானியங்கி பாசனம் மூலம் சொட்டுநீர் முறை அமைத்தால் ஏக்கருக்கு 4 ஆயிரம் வழங்கப்படும். நடவு மற்றும் மறுதாம்புக்கு அப்தா வாங்க ரூ.400, கடற்பாசி இடுவதற்கு ரூ.500, ஹியூமிக் அமிலத்துக்கு 300 ரூபாய் வழங்கப்படும்.நடவு கரும்பில் குறைந்தபட்சம் ஏக்கருக்கு 36 டன், நர்சரியில் 32 டன் மகசூல் எடுத்தால் மட்டுமே ஊக்கதொகை கிடைக்கும். மறுதாம்பில் 35 டன்னுக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு டன்னுக்கு மட்டுமே பொருந்தும், ஊக்க தொகைகள் அனைத்தும் கரும்பு அறுவடை செய்து ஆலைக்கு சப்ளை செய்த பிறகே வழங்கபடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டு லாபம் அடையலாம் என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை