உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

புதுச்சத்திரம் : மாடு மேய்க்கும் போது அறுந்து கிடந்த, மின் கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் தாக்கி, பரிதாபமாக இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 72; இவர் நேற்று பூதம்கட்டி பகுதியில் உள்ள, நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி