மேலும் செய்திகள்
மின்கம்பியை மிதித்த முதியவர் பலி
11-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி, கூலி தொழிலாளி இறந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 70; இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2:00 மணியளவில் வயலுக்கு சென்ற முதியவர் அதேபகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் நிலத்தில் அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சென்ற கம்மாபுரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Oct-2025