மேலும் செய்திகள்
தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு
03-Aug-2025
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க கடலுார் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராஜூ, செயலாளர் மாயவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார். மாநில துணை தலைவர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், உறுப்பினர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை பெற்றுத் தருவது. கூலி நிர்ணய பட்டியல் தயாரித்தல். அரசு அறிவுறுத்தலின்படி மின் உரிமம் பெற்ற மின் அமைப்பாளர்களின் சான்று பெற வலியுறுத்தல் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல துணை செயலாளர் மதியழகன், மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் முருகன், துணை செயலாளர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஸ்ரீமுஷ்ணம் கிளை சங்க செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
03-Aug-2025