உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி பொறியாளர் பலி

மின்சாரம் தாக்கி பொறியாளர் பலி

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஏ. மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள் மகன் ராஜ்குமார்,28; மரைன் இன்ஜினியரிங் முடித்த இவர், கப்பலில் வேலை செய்து வந்தார். தீபாவளி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமார் புதிதாக கட்டி வரும் வீடு கட்டுமான பணிகளை கவனித்து வந்தார். இன்று (நவ.,14) காலை 10:00 மணிக்கு கட்டுமான பணிக்கை தண்ணீர் பிடித்து வைக்க மோட்டாரை இயக்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், ராஜ்குமார் துாக்கியடிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை