அண்ணா பல்கலைகழகத்தில் தொழில் முனைவோர் பயிற்சி
பண்ருட்டி : பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.நிகழ்ச்சியை அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் அரிகரன் தலைமையேற்று துவக்கி வைத்தார். மாணவர்கள் எதிர்காலத்தில் சுய தொழில் துவங்கி, நாட்டிற்கு வளர்ச்சி பாதையை உருவாக்கி பலருக்கும் வேலை வாய்ப்பை கொடுப்பதோடு வளர்ச்சியான தேசத்தை உருவாக்க வேண்டும் என பேசினார்.கல்லுாரி புல முதல்வர் முத்துக்குமரன் மாணவர்களிடம் கலந்தாய்வு நடத்தினார். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் பயிற்சியாளர் விப்பித் மாணவர்களுக்கான பயிற்சி அளித்தார்.முகாமில் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியை கல்லுாரியின் நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் அரிகரன் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.