உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அருணாச்சலா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

அருணாச்சலா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

புவனகிரி : புவனகிரி அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தாளாளர் ரத்தினசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இயக்குனர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி ஆலோசகர் செல்வராஜ் வரவேற்றார்.கடலுார் மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர் கனகசபை சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் தினம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.தலைமை ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ