உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் சமத்துவ பொங்கல் 

விருத்தாசலத்தில் சமத்துவ பொங்கல் 

கடலுார் : ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் பி.எஸ் ஸ்மார்ட் கல்வி மையம் சார்பில், விருத்தாசலம் ய.எஸ்.ஏ.சி.சி., பதிவு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.நிகழ்ச்சியில் கோலப்போட்டி, பொங்கல் தயார் செய்தல் போட்டி, ஆடல் பாடல் போட்டி நடந்தது. ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மைய தலைமை நிர்வாக அதிகாரி பானுமதி மணிகண்டராஜன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மைய ஆலோசகர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.ஜே.சி.ஐ., அமைப்பின் தலைவர் சுரேஷ், செயலாளர் விஜய், பொருளாளர் மணிவாசகம், துணைத் தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் (பயிற்சி) ஜான் விக்டர், துணை இயக்குனர் விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். செயல் மேலாளர் ஸ்டாலின், திட்ட மேலாளர் சரவணகுமார், துணை மேலாளர் மணிபாலன், மாரிமுத்து, இளையராஜா, சீதா, லக்ஷ்மி, நிவேதா, அனிதா, சியாமளா, வினோ தினி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை