உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

திட்டக்குடி: திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் சங்கம் சார்பில் செயற்குழுக் கூட்டம் நடந்தது.மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் பேரின்பம், மாநில பொருளாளர் பாண்டுரங்கன், ஒன்றிய தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் குமார், திருஞானம், கார்த்திகேயன், ராஜ்குமார், ஆனந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், திட்டக்குடி தொகுதியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், அருந்ததியர் மக்களுக்கு இலவச மனை வழங்குவது. பஞ்சமி நிலத்தை மீட்பது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25ம்தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் தலைமை செயலகத்தில் மனு கொடுப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகி நந்தினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை