உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

திட்டக்குடி, : கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திட்டக்குடியில் நடந்தது.முகாமிற்கு பள்ளி நிறுவனர் கோடி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், முகாமில் பங்கேற்ற பொதுமக்களை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.பள்ளி முதல்வர் முத்துஅய்யாதுரை, நிர்வாக அலுவலர் சித்ரா முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் 71பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்துச்செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை