| ADDED : நவ 24, 2025 07:12 AM
சேத்தியாத்தோப்பு: கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலம் மெயின்ரோட்டின் ஓரமாக நன்கு வளர்ந்திருந்த புளியமரம், மழை காரணமாக நேற்று பிற்பகல் 2:30 மணியளவில், வேரோடு பெயர்ந்து, அருகிலுள்ள வீட்டின் மீது விழுந்தது. அதனால், மேலே சென்ற மின்கம்பி அறுந்து விழுந்தது. அப்போது வீட்டின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த மரியசூசை, 70; அவரது மனைவி பிலோன்மேரி, 65; பக்கத்து வீட்டில் வசித்து வந்த வனதாஸ்மேரி, 70; ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார் மற்றும் ஒரத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டின் மீது விழுந்த புளியமரத்தினை வெட்டி அகற்றினர். இச்சசம்பவம் குறித்து ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.