மேலும் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவன் கைது
26-Dec-2024
மனைவி மாயம் கணவர் புகார்
10-Dec-2024
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த புலவன்குப்பத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 32; இவரது மனைவி தேவயானி,25; திருமணமாகி 7ஆண்டுகள் ஆகிறது. தினேஷ், 6; மற்றும் அபினேஷ் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவர் மூர்த்தி தனது முந்திரி வியாபாரத்திற்காக மனைவி தேவயானியின் 15 சவரன் நகைகளை வாங்கி அடகு வைத்திருந்துள்ளார். அதை மீட்டு தராததால், அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.மன உளச்சலில் இருந்த தேவயானி நேற்று முன்தினம் சமையல் செய்யவில்லை. இதை கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மூர்த்தி பால் வாங்க கடைக்கு சென்று திரும்பியபோது, தேவயானி வீட்டில் புடவையால் துாக்கு போட்டு இறந்து கிடந்தார்.இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
26-Dec-2024
10-Dec-2024