உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகன், மகளுடன் விவசாயி குடும்ப தகராறில் தற்கொலை

மகன், மகளுடன் விவசாயி குடும்ப தகராறில் தற்கொலை

பண்ருட்டி,:மகன், மகளுடன் விவசாயி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா, 40; எம்.எஸ்சி., பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா, 35; இவர்கள் மகன் குமரகுரு, 12, மகள் தாரணிஸ்ரீ, 7. இருவரும் காடாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் 6 மற்றும் 2ம் வகுப்பு படித்து வந்தனர். பண்ருட்டி, இந்திரகாந்தி சாலையில் சொந்தமாக வீடு கட்டி, குடும்பத்துடன் ராஜா வசித்தார். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, சமீபத்தில் சரண்யா 'ஆசிட்' குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், தன் தாய் வீட்டில் தங்கினார். ராஜா குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று மதியம், ராஜா, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக, தங்கள் உறவினர்களுக்கு 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்பினார். திடுக்கிட்ட உறவினர்கள், ராஜாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மூவரும் ஒரே கயிற்றில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர். பண்ருட்டி போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ