உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்

 விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த பெருமுளையில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் தயாபேரின்பம் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகி முருகானந்தம் வரவேற்றார். பரிமளா, சந்திரா, செல்லம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், கடந்த 2009ல் வெலிங்டன் நீர்த்தேக்கம் புனரமைக்க ரூ.29 கோடி; கடந்த, 2017ல் ரூ. 6 கோடி; 2018ல், ரூ. 1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துார்வாருதல், கரை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. ஆனால், 2025ல், வெலிங்டன் நீர்த்தேக்கம் புனரமைக்க 130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை முறையாக பயன்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய குழு அமைக்க வேண்டும். அக்குழுவில் விவசாயிகளை பிரதிநிதிகளாக சேர்க்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை