மேலும் செய்திகள்
உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு
22-Jul-2025
திட்டக்குடி : திட்டக்குடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திட்டக்குடி மற்றும் மங்களூர், நல்லுார் வட்டாரங்களில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இக்கிராமங்களில் தோட்டப் பயிர்களான கீரை வகைகள், கத்தரி, வெண்டை, அவரைக்காய், கொத்தவரை, சுரைக்காய், பூசணி, வாழை, வேர்க்கடலை, மக்காச்சோளம், மரவள்ளி போன்றவைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அவ்வாறு விளைந்துள்ள பொருட்களை விற்பதற்கு சைக்கிள் மற்றும் மொபட்டுகளில் பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்கின்றனர். ஆனால் போதிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்படைவது மட்டும் தொடர்கிறது. இதனை தவிர்க்க திட்டக்குடி நகராட்சியில் உழவர் சந்தை அமைத்தால் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பாக அமையும். எனவே, திட்டக்குடியில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22-Jul-2025