உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் குறைகேட்பு

விவசாயிகள் குறைகேட்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ., சையத்து மெஹ்மூத் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், திட்டக்குடி அடுத்த மா.பொடையூர் கிராமத்தில் ஏரி, குளம், நுாலக கட்டடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட உளுந்து, முந்திரி பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்.விருத்தாசலம் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்தந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ