உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விதிமீறல் இறால் பண்ணைகள் விவசாயிகள் மனு

 விதிமீறல் இறால் பண்ணைகள் விவசாயிகள் மனு

கடலுார்: பரங்கிப்பேட்டை அருகே விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை எழுந்துள்ளது. பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டத்தில் கொடுத்த மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சில்லாங்குப்பம் மண்டபம், அரிராஜபுரம், குத்தாபாளையம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. அதில் அரியகோஷ்டி, பெரியகுமட்டி கிராமங்களில் உள்ள, 150 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல், உளுந்து உள்ளிட்ட விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அப்பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகில் அரசு விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகள், கழிவு நீரை விவசாய நிலத்தில் திறந்து விடுகின்றனர். இதனால் விவசாயப்பயிர்கள் கருகி, முளைப்புத்தன்மை இல்லாமலும் வீணாகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் விவசாயிகள் கடும் மனவேதனைக்கு உள்ளாகின்றனர். கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !