மேலும் செய்திகள்
ஜன.,10ல் சர்க்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம்
12-Dec-2025
கடலுார்: அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள், நேற்று காலை கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது, கடந்த காலத்தில் நாங்கள் பெண்ணாடம் கரும்பு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்துவந்தோம். விவசாயிகளுக்கு சிரமமின்றி கொள்முதல் நடந்தது. எங்கள் பகுதி எம்.ஆர்.கே.,கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்டதாக சென்னை சர்க்கரை துறை ஆணையரிடம் இருந்து அறிக்கை வந்தது. ஆனால், எங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்வதே விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த, 7 ஆண்டுகளாக, பெண்ணாடம் சர்க்கரை ஆலை இயங்காத நிலையில், எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு பல மாதங்கள் பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். கரும்பை உற்பத்தி செய்யும் விவசாய விருப்பப்படி கரும்பை விரும்பிய ஆலைக்கு வழங்க அனுமதிக்க வேண்டும்.
12-Dec-2025