உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாய்க்கால் துார்வார கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வாய்க்கால் துார்வார கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் வாய்க்காலை அதிகாரிகள் துார்வாராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேத்தியாத்தோப்பு அடுத்த தேவன்குடி கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்தனர். இந்நிலையில், கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானது. தேவன்குடி ஊராட்சிக்கு சொந்தமான வடிகால் வாய்க்காலை துார்வாராததால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாய்க்காலை துாரவார ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் கலைந்து சென்றனர். வாய்க்காலை துார்வாரவில்லை எனில், விரைவில் கிராம மக்களை ஒன்று திரட்டி ஒரத்துார் பஸ் நிறுத்தம் அருகே தொடர் உண்ணாவிரதம் அல்லது காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை