உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி : ஏ.ஐ.டி.யூ.சி., அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன், இந்திய கம்யூ., மங்களூர் ஒன்றிய செயலாளர் நிதி உலகநாதன், நிர்வாகிகள் ரமேஷ், கடவுள், ராதாகிருஷ்ணன், தேவா உட்பட பலர் பங்கேற்றனர்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ