என்.எல்.சி.,யில் போனஸ் கேட்டு உண்ணாவிரதம்
நெய்வேலி: என்.எல்.சி., பொது காண்ட்ராக்ட் தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் போனஸ் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தொழிற்சங்க செயலாளர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் கண்ணன், நிரந்தர சங்க தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் பாலமுருகன், பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். ஒப்பந்த சங்கத்தின் பொருளாளர் வேல்முருகன் வரவேற்றார்.நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தலைவர் பழனிசாமி துவக்கி வைத்தார். என்.எல்.சி., ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும், ரூ.4 ஆயிரம் கருணைத் தொகையை ரூ. 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும், முதற்கட்டமாக ரூ. 75 ஆயிரம் சொசைட்டி- காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேராட்டம் நடந்தது.