மேலும் செய்திகள்
மகள் மாயம்தந்தை புகார்
01-Apr-2025
புதுச்சத்திரம், : மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார் முள்ளிபள்ளத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் பிரீத்தி, 30; இவருக்கும் சிவபுரியை சேர்ந்த மணிமாறனுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 8 வயதில் பிரணவ் என்ற மகன் உள்ளார்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மணிமாறனுக்கும், பிரீத்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரீத்தி தனது தந்தை வீட்டில் மகனுடன் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி, முருகேசன் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, மகள் பிரீத்தி, பேரன் பிரணவ் இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Apr-2025