மேலும் செய்திகள்
சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு '20 ஆண்டு'
27-Nov-2024
கடலுார் : கடலூர் அருகே மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.கடலுார் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில், வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த கணவர் சொந்த ஊருக்கு திரும்பினார். அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அப்போது மூத்த மகளை அவ்வப்போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். பின் இளைய மகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள், கடலுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். 2021ம் ஆண்டு சிறுமிகளின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ், தீர்ப்பளித்தார்.சிறுமிகளின் தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதிரத்தினம் ஆஜரானார்.
27-Nov-2024