உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி 

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி 

கடலுார் : திருச்சியில் நடந்த மாநாட்டிற்கு சென்று திரும்பிய போது, லாரி மோதி இறந்த வி.சி., கட்சி நிர்வாகிகள் 3 பேரின் குடும்பத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் நிதியுதவி வழங்கினார்.திருச்சியில் நடந்த வி.சி., கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் பங்கேற்று வேனில் திரும்பிய புதுச்சத்திரம், வில்லியநல்லுார் உத்திரகுமார், அன்புசெல்வன், யுவராஜ் ஆகியோர் வேப்பூர் அருகே லாரி மோதி இறந்தனர். இவர்களின் உடலுக்கு வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தி, மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் சிந்தனைச்செல்வன், ஆளூர் ஷானாவாஸ், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ