மேலும் செய்திகள்
யார் கெட்டிக்காரன்? துரியோதனனா? அர்ஜுனனா?
27-Sep-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சந்தைந்தோப்பு வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமை தாங்கி பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தீயணைப்பு வீரர்கள் காய்கறி சந்தைக்கு வந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தடுப்பு, மழைவெள்ளத்தில் எவ்வாறு மீட்பது குறித்து ஒத்திகை செய்து காண்பித்தனர். மேலும், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடி விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக வெடிப்பது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளித்தனர். இதில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
27-Sep-2025