உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

மாவட்டத்தில் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஆண்டு தோறும் ஏப்., 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, இந்தாண்டும் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் வரும் 15 முதல் ஜூன் 14 வரை தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம். தடையை மீறி மீன்பிடி வலைகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி