உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 2ம் தேதி கொடியேற்றம் 

வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 2ம் தேதி கொடியேற்றம் 

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வரும் 1ம் தேதி காலை சிறப்பு திருமஞ்சனம், மாலை வாஸ்துசாந்தி பூஜைகள் நடக்கிறது. 2ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் கொடியேற்றத்துன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. தொடர்ந்து, உபயநாச்சியாருடன் வீதியுலா நடக்கிறது. தினசரி இரவு சிறப்பு வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5ம் தேதி இரவு தங்க கருட சேவை, 6ம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை, 8ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 9ம் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம், 10ம் தேதி தேரோட்டம், 12ம் தேதி 108 கலச திருமஞ்சனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை