உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சாலையில் வெள்ளப்பெருக்கு போக்குவரத்து துண்டிப்பு

 சாலையில் வெள்ளப்பெருக்கு போக்குவரத்து துண்டிப்பு

புதுச்சத்திரம்: பூவாலை-குண்டியமல்லுார் இணைப்பு சாலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. புதுச்சத்திரம் அருகே பூவாலை-குண்டியமல்லுார் பகுதியை இணைக்கும் வகையில், இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் பூவாலை, அலமேல்மங்காபுரம், வேளங்கிப்பட்டு, பால்வாத்துண்ணான், மணிக்கொல்லை, வில்லியநல்லுார், சேந்திரக்கிள்ளை உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் குறிஞ்சிப்பாடி, வடலுார் செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாகவும் என்.எல்.சி.,யில் திறந்து விடப்பட்ட தண்ணீராலும், இந்த சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து, சாலையின் குறுக்கே ஓடுகிறது. இதனால் நேற்று முதல் இந்த சாலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை